About

We all know the key Of your success

WHY YOU’LL LOVE OUR PRODUCTS?

Welcome To Only Natural

Natural Fresh Juice

We provide the natural and fresh fruit juice always.

Hot with Snacks

We give you tasty and healthy snacks with hot.

Clean and Quality

We serve very clean and quality services.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லிவிட்டுப்போன நல்ல விஷயங்கள் ஏராளம். துரித உணவு, ரசாயணம் கலந்த உணவுகள் எனத் திரிந்த இன்றைய இளைஞர்களை இயற்கை குறித்து அவர் சிந்திக்க வைத்த செயல் மிகவும் அருமையானது. அதனால் பலரும் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த பல்வேறு வேலைகளைத் துறந்து விவசாயத்துக்கு மாறியிருக்கிறார்கள். இதுபோக சிலர் இயற்கை சார்ந்த கொள்கைகளை கடைபிடித்தும் வருகின்றனர். கை நிறைய சம்பளம் தந்த ஆசிரியர் வேலையை உதறித் தள்ளிவிட்டு, இப்போது மன்னார்குடியில் இயற்கை முறையில் பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறுகள், கருப்பட்டி பால் என இயற்கை உணவுகளை விற்பனை செய்து கொண்டு இருக்கின்றோம்.

உடம்புக்கு ஆரோக்கியம்னு சொல்லித்தான் காய்கறி, பழங்களைச் சாப்பிடுறோம். அதுல சர்க்கரையோ, பாலோ கலக்குறப்போ அது கெட்டுப்போயிடுது. மன்னார்குடியில எனக்குத் தெரிஞ்சு இந்த மாதிரியான கடை இல்ல. இங்க சர்க்கரை, தண்ணீர், பால்னு எதுவும் இல்லாம இயற்கையான சுவையோட பழச்சாரை கொடுத்துக்கிட்டு வர்றேன். கடையை முழுக்க பனை மரம், தென்னங்கீற்று, மண் தட்டு, மண் குடுவைனு எல்லாத்தையும் இயற்கையாவே கொடுத்துக்கிட்டு வர்றேன்.

ப்ரெஷ் ஜுஸ் சுவைக்காக மட்டும் குடிக்குறது இல்லை. ஆரோக்கியத்திற்காகவும்தான் குடிக்கிறோம். பெரும்பாலும் சுவைக்காக சர்க்கரை, பால்னு கலப்படம் செஞ்சு மெருகேத்திதான் கொடுக்கிறாங்க. அதனால இதையெல்லாம் போடாமக் கொடுக்கணும்னு வீட்டுல செஞ்சு பார்த்தேன். நல்ல சுவையா இருந்தது மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்குது. வியாபாரத்தை விட நமக்கு வாடிக்கையாளர்களோட ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம்.

நெல்லிக்காய், அத்திப்பழம், வாழைப் பூ, வாழைத் தண்டு, நார்த்தங்காய், கேரட், பீட்ரூட், அன்னாசி, பப்பாளி, கரும்பு, சாத்துக்குடி, திராட்சை பழங்களோட பழச்சாறுகளை கொடுக்கிறோம். பெரும்பாலும் மிக்சி பயன்படுத்தாம, பழச்சாறு கரண்டி மூலமா சாரை எடுத்துப் பிழியுறோம். அனைத்து வகைகளிலும் சுவைக்குக் கரும்புச் சாறு மட்டுமே சேர்க்குறோம். பழச்சாறுகளை 20 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 40 ரூபாய் வரை விற்பனை செய்யுறோம்.

மாலை நேரங்கள்ல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் பாணிபூரி மாதிரியான உணவுகளை எடுத்துக்குறாங்க. அது பெரும்பாலும் ஆரோக்கியம் இல்லாம இருக்கும். அதனால, மாணவர்களுக்காக பாணிபூரி, பணியாரம் போன்றவற்றை வித்தியாசமாகக் கொடுக்குறோம். நாங்கள் சொந்தமாக கோதுமை மாவு அரைத்து, கடலை எண்ணெய்யில் சமைச்சு மண்பாண்டத்துல வாழை இலையில கொடுக்கிறோம். முதியவர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்காக நாட்டுக் கருப்பட்டியோட பசும்பால்ல, கருப்பட்டி பால் மற்றும் கருப்பட்டி காபி, மண்பானை டீ தயாரிச்சுக் கொடுக்கிறோம். காலை 9 மணியில இருந்து இரவு 9 மணி வரை கடை இருக்கும்.

செயற்கையைத் தவிர்த்து இயற்கை சார்ந்து, ஐயா நம்மாழ்வார் காட்டின பாதையிலேயே எங்கள் கடை செயல்படுகிறது. இங்க வர்றவங்களும் மன நிம்மதியை அடைஞ்சு, கொஞ்ச நேரம் ஓய்வெடுக்குற இடமாவும் மாறிக்கிட்டிருக்கு. இதைவிட வேறென்ன மன திருப்தி வேணும் சொல்லுங்க".